• Sep 20 2024

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, அதன்பின் நடிகராக களமிறங்கியவர் உதயநிதி ஸ்டாலின். எம். ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக களமிறங்கினார்.

அதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார்.இதன்பின், ஹகமத் இயக்கத்தில் வெளிவந்த மனிதன் திரைப்படம், உதயநிதி திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. எனினும் இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு உதயநிதி நடிப்பில் வெளிவந்த சைக்கோ ரசிகர்களிடத்தே சூப்பர்ஹிட்டானது.

இன்று உதயநிதியின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. விமர்சனங்களும் நல்ல முறையில் வந்து கொண்டிருக்கின்றன.

அடுத்தடுத்து நடிப்பார் என்று பார்த்தால் அரசியலில் பிஸியாக இருப்பதால் நடிப்பை நிறுத்தப்போகிறார் என செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மேலும் இப்படி சினிமாவிலும், அரசியலிலும் பிஸியாக இருக்கும் உதயநிதியின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா, 2021ம் ஆண்டின்படி அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ. 80 கோடிக்கு மேல் என்கின்றனர்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உறுதியானது என்பது தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement