• May 20 2024

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. !

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

இவர் தற்பொழுது இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

இவ்வாறுஇருக்கையில் இவர் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கோமாளி.

அத்தோடு மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, ஷாரா, மற்றும் பல முக்கிய நட்ச்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement