• Sep 21 2024

நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா ? வாரிசு படத்தின் சில சுவாரிஸ்ய விசயங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும் அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இவ்வாறு இருக்கையில் இப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குநர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது என கூறப்படுகின்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்

இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கின்றது என தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு வாரிசு என பெயர் இடப்பட்டு உள்ளது. அந்த போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.அத்தோடு இந்த படத்தின் மூன்று போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்றது.

இந்நிலையில் மூன்றாவது போஸ்டரில் விஜய் பைக்கில் அமர்ந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பைக் குறித்த பேச்சு தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருக்கிறது.

இந்த நிலையில் அந்த பைக் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, விஜய் அமர்ந்துள்ள இந்த பைக்கின் பெயர் யெஸ்டி அட்வெஞ்சர் (Yezdi Adventure). இந்த வகை பைக்கில் Adventure Matte Slick Silve, Adventure Matte Mambo Black மற்றும் Adventure Camo Ranger Camo என 3 மாடல்கள் உள்ளன. மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய் பயன்படுத்திய பைக்கின் ஆரம்ப விலையே சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாம். லிட்டருக்கு சுமார் 35 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறதாம். ஆகவே, படம் வெளியானதும் இந்த பைக் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement