தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை நட்சத்திரங்களின் அறிமுகம் ரசிகர்களிடையே எப்போதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு தம்பதியினரின் மகள் அவந்திகா, நடிகர் தனுஷ் அவர்களின் அக்கா மகன் பவிஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘அட்டாக்கர்’ தற்போது பூஜையுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் தாமோ நாகபூஷணம் இயக்குகிறார். படத்தின் தொடக்க விழா சினிமா பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படப்பிடிப்பை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார். இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.
சினிமா பின்னணியைக் கொண்ட இரண்டு இளம் நட்சத்திரங்கள் முதன்முறையாக இணையும் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பூஜை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Listen News!