• Sep 20 2024

வீட்ல விசேஷம் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஆர்..ஜே. வாக தமது பயணத்தை தொடங்கிய பாலாஜி தற்போது கதாநாயகன், இயக்குநர் என தமிழ் சினிமாவின் பன்முகத் திறமை கொண்ட கலைஞனாக முன்னேறியுள்ளார்.

என்.கே சரவணன் இயக்கத்தில், ஜீ ஸ்டூடியோ மற்றும் போனி கபூரின் பேவியோ பிராய்கட்ஸ் நிறுவனமும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள “வீட்ல விசேஷம்” என்ற புதிய படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் .ஆர்.ஜே பாலாஜி.மேலும் சத்யராஜ்.ஊர்வசி, அபர்ணா பாலமுரளி போன்றோர் நடித்துள்ளனர்.

“குழந்தை பெற்றுக்கொள்ள வயது தடையில்லை” என்ற சமூக கருத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று ஜூன் 17 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகியது.

இவ்வாறுஇருக்கையில் இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement