• May 17 2024

சங்கர் படத்தில் இணையவுள்ள விஜய் சேதுபதி-அதுவும் எந்த காரெக்டரில் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் பிரமாண்டம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இயக்குநர் ஷங்கர் தான். படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையையும், வித்தியாசமான கதைக் களத்தையும் கொண்டு சிறந்து வளங்குவார். இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். மேலும் அது மட்டுமில்லாமல் ஷங்கர் படத்துக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் கூறு வேண்டும்.

2.0 படத்திற்கு பின்னர் ஷங்கர் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது ராம் சரணுக்கு 15வது படம். இந்தப் படத்தில் இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குநர் ஷங்கர், கமலை வைத்து இந்தியன் 2 படத்தை மீண்டும் எடுத்து உள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு உள்ளார். மேலும் அதில் அண்மையில் எனக்கு பிடித்த வில்லனாக விஜய் சேதுபதி மாறி உள்ளார் என கூறி உள்ளார் ஒரு மாஸ் ஹீரோ தற்போது வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

அத்தோடு அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறுகின்றது, எனினும் அவர் வில்லனாக நடிக்கும் போது வேற லெவெலில் தன்மையாக இருக்கின்றது. எனக்கு பிடித்த வில்லனாக விஜய் சேதுபதி இருக்கிறார் என கூறியுள்ளார்..

குறிப்பாக சமீபத்தில் விஜய் சேதுபதி வில்லமான மாஸ்டர்,விக்ரம் போன்ற படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.அந்த படங்களும் வெற்றி பெற்று வசூல் சாதனை வேற்று வருகிறது.

இதனால் தான் இனி இயக்கும் படங்களில் விஜய் சேதுபதியை வில்லனாக வைத்து இயக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் அப்படினா இனி ஷங்கர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு அதிகம் இருக்குமென தெரியவந்துள்ளது. இந்தியன் 2 படத்தில் கூட நடிகர் விஜய் சேதுபதிக்கு நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Advertisement

Advertisement