• Jan 18 2025

நீ அடிச்சா வாங்கிட்டு போற பொண்ணு நான் இல்ல! அர்னவை வச்சு செய்யும் திவ்யா ஸ்ரீதர்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8 தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆண்கள் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் சிலர் தந்திரமாக விளையாண்டு பெண்கள் அணியை கவுத்து கொண்டு வருகிறார்கள். 


இதற்கு இடையில் இரண்டாவது வார முடிவில் அர்னவ் மக்களிடம் ஓட்டு கம்மியாக வாங்கி வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் போகும் முன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் அர்னாவை வச்சு செய்யும் அளவிற்கு சில விருதுகளை கொடுத்து அசிங்கப்படுத்தினார்கள்.


இதனால் வெளியே வந்த அர்னாவ், விஜய் சேதுபதி முன் மொத்த வன்மத்தையும் கக்கும் அளவிற்கு ஜால்ரா பாய்ஸ் என்று சுட்டிக்காட்டி சில போட்டியாளர்களை சொல்லி கிண்டல் அடித்தார். இதனை பார்த்த விஜய் சேதுபதி இது உங்களுடைய வன்மத்தை கக்கும் இடமில்லை என்று அர்னாவின் திமிரை அடக்கி வெளியே அனுப்பினார்.

d_i_a


இப்படி அவமானப்பட்டு வெளியே வந்த அர்னவை முன்னாள் மனைவி மற்றும் நடிகையுமான திவ்ய ஸ்ரீதர், வச்சு செய்யும் அளவிற்கு சில வீடியோக்களை போட்டு வருகிறார். தற்போது இந்த வீடியோக்கள் அனைத்தும் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது. அதாவது நீ அடிச்சா வாங்கிட்டு இருக்கிற பொண்ணு நான் இல்ல, எனக்கு கொடுத்தது டபுளாக உனக்கு திரும்பி விழும் அதுக்கு என்னடா பண்ணுவ என்று ரீல்ஸ் செய்து போட்டிருந்தார்.


தற்போது மீண்டும் வடிவேலுவின் பாஷையில் கிண்டல் அடிக்கும் விதமாக ” நான் அசிங்கப்பட்டேன், அவமானப்பட்டேன், வெட்கப்பட்டு வேதனைப்பட்டேன், துக்கபட்டேன், துயரப்பட்டேன், கஷ்டப்பட்டேன், இத்தனைப்பட்டும் இன்னும் திருந்தலையே எனும் காமெடியை ரீல்ஸாக செய்து பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மனசாட்சியே இல்லாத அர்னாவ்க்கு இதை டெடிகேட் பண்றீங்களா என்று கேட்டு திவ்யாவிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.


இப்படி முன்னாள் மனைவி திவ்ய ஸ்ரீதர் வச்சு செய்யும் அளவிற்கு அர்னாவ், செல்லமா சீரியலில் ஹீரோயினுடன் சேர்ந்து திவ்ய ஸ்ரீதரை அழ வைத்திருக்கிறார். அக்ஷிதாவும் அர்னாவ் உடன் சேர்ந்துதான் பிக் பாஸ்க்கு போனார். இந்நிலையில் ஒரு வேலை வையில் கார்ட் என்றியில் திவ்யா ஸ்ரீதர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்தால் கண்டன்டுக்கு குறைவிருக்காது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement