• May 20 2024

மீண்டும் சோஷியல் மீடியாவில் ரீ என்ட்ரி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும படத்தை இயக்கி மெகா ஹிட் வெற்றியைக் கொடுத்த இயக்குநர் தான் லோகேஷ் கனகராஜ். கமல் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு வெளியாகிய திரைப்படம் என்பதால் விக்ரமிற்காக ரசிகர்கள் வெறித்தனமான எதிர்பார்ப்பில் இருந்தனர். 

இந்தப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் வெளியான இந்தப்படம் ஒட்டுமொத்த திரையுலகையும் ஈர்த்தது. விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதியின் 67 வது படத்தை இயக்கவுள்ளார்.

'மாஸ்டர்' படத்தில் விமர்சனரீதியாக எழுந்த சர்ச்சைகளை சரிகட்ட போவதாகவும், இந்தப்படம் ழுழுக்க தன்னுடைய பாணியில் இருக்க போவதாகவும் லோகேஷ் பேட்டிகளில் கூறி வருகிறார். மேலும் இந்தப்படத்தில் விஜய் நாற்பது வயதான கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பிறகு சோஷியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுப்பதாக டுவிட்டரில்  லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி டுவிட்டரில் பிரேக் எடுப்பதாக கூறிய லோகேஷ், சரியாக 67 நாட்கள் கழித்து தற்போது மீண்டும் டுவிட்டருக்கு வந்துள்ளார்.

  இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.இதனால் விரைவில் 'தளபதி 67' படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் ஒரு சில தினங்களில் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement