• May 09 2024

குந்தவையாக மாறிய காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன்- வைரலாகும் வீடியோவால் விழுந்து விழுந்து சிரிக்கும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலை தாண்டியுள்ளது, படக்குழுவும் படு சந்தோஷத்தில் உள்ளார்கள்.


இப்படத்தில் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.இந்தப் படத்தின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளதோடு த்ரிஷாவுக்கு இந்தப் படம் நல்லதொரு கம்பேக் கொடுத்துள்ளது.

அவரை போலவே கெட்டப்போட்டு பல நடிகைகள் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அவை இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.குந்தவை ரோலில் அவரது லுக் தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்ட் எனலாம்.


இந்த நிலையில் அவரைப் போலவே விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் கெட்டப் போட்ட வீடியோ ஒன்றினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement