எதிர்பார்ப்புகளை தாண்டி பெண்ணிய சமத்துவம் பேசும் கீர்த்தி சுரேஷ் வின்டேஜ் லுக்கில் தனக்கான பங்கை சிறப்புறவே செய்துள்ளார்.கீர்த்தி சுரேஷை தாண்டி படத்தின் ஹீரோ மற்றும் தாதாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தங்களுக்கான பங்கை சிறப்புற ஆற்றி பல இடங்களில் கைதட்டல்களை வாங்கிருந்தனர்.
படத்தின் நீளம் குறைவாக இருந்த போதிலும் இன்னும் சிறுகாட்சிகளின் தேவைப்பாடை ஜோசிகைகையில் இன்னும் சற்று நீளத்தை படத்தின் முதல் பாதியில் குறைத்திருந்தால் சில இடங்களில் ஏற்பட்டிருக்கும் தொய்வை இல்லாது செய்திருக்கலாம்.
இன்றைய நாளில் பெண்ணிய சமத்துவம் மற்றும் மொழி திணிப்பிற்கு எதிராக பேசும் பெண்களின் குரல்களே முழுமையாய் உயராத நிலையில் 70களின் காலத்தில் இவற்றை பேசும் ஓர் பெண்ணை மையமாக கொண்ட கதை படத்தின் முடிவில் சரியான ஓர் தீர்வை கொடுக்க மறந்திருக்கிறது.ஆனபோதும் ஒரு குடும்ப என்டெர்ட்ரைனராக இப் படம் ரசிகர்கள் மனதை வென்றுள்ளது என்றே சொல்லலாம்.
Listen News!