பிரபல நடிகர் தனுஷ் தற்போது சில திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் படத்துக்கு படம் தனுஷ் பட்ஜெட்டை கூட்டுவதாக வலைப்பேச்சு செய்தியாளர் கூறியுள்ளார். அது குறித்து பார்ப்போம்.
நடிகர் தனுஷ் தற்போது குபேரா, இட்லி கடை, இளையராஜா பயோபிக் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் "நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்" என்ற திரைப்பத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் வலைப்பேச்சு செய்தியாளர் "தனுஷ் சமீபகாலமாக படங்களில் நடித்து வருகிறார். இதுல சுவாரஷ்யம் என்ன என்றால் இட்லி கடை பெஸ்ட் காப்பிக்கு 104 கோடி முடிவடைந்துள்ளது. அடுத்தது வேல்ஸ்க்காக படம் பண்ண இருக்காரு அதன் பட்ஜெட் 145 கோடியாம். பட்ஜெட்டை கதை கேட்கவில்லை தனுஷ் கேக்குறாரு" என்று கூறியுள்ளார்.
"d_i_a
மேலும் கூறிய இவர் "ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் 40 கோடி எகிறுகிறது. தனுஷ் எப்படியும் அடுத்த படத்துக்கு 175 கோடி கேட்பாரா இருக்கும். தயாரிப்பாளர்களிடம் நிறைய பணம் இருப்பதால் கேட்ட உடனே ஏத்தி கொடுக்கிறாங்க" என்று கூறியுள்ளார் வலைப்பேச்சு செய்தியாளர்.
Listen News!