தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது என்பதும் கடந்த இரண்டு நாட்களில் இந்த படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர் என்பதும் இதனால் 18 வயதுக்கு குறைவானவர்கள் இந்த படத்தை பார்க்க தகுதியற்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில நகரங்களில் ‘ராயன்’ படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றதாகவும் குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளை அழைத்து சென்றதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
’ஏ’ சர்டிபிகேட் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு மாணவ மாணவிகளை எப்படி அழைத்துச் செல்லலாம்? தனுஷ் ரசிகர்களுக்கு இது கூட தெரியாதா? இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’ஏ’ சர்டிபிகேட் படத்திற்கு அனுமதி இல்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் ஏன் கூறவில்லை ? தனுஷ் ரசிகர்கள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டினார்களா? அல்லது தெரியாமல் சென்றார்களா? போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தனுஷ் ரசிகர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!