• Sep 20 2024

ஹீரோயினிக்கு டப் கொடுக்கும் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள்; லேட்டஸ்ட் க்ளிக் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர்.இவ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி வருபவர்களில் ஒருவர் உன்னி கிருஷ்ணன்.

மேலும் கர்நாடிக் இசைக் கலைஞரான இவர் அதிகம் சாமி பாடல்கள், மேடை கச்சேரி என நிறைய செய்துள்ளார், தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

தற்போது இவரை மக்கள் நினைவுகூர்வது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான். எனினும் இதுவரை 7 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் இவருக்கு உத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.  இவருக்கு அறிமுகமே தேவையில்லை, இவர் 10 வயதிலேயே சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு பாடல் பாடி தேசிய விருது பெற்றவர். 

அதன்பிறகு பிசாசு படத்தில் போகும் பாதை, தெறியில் ஈனா மீனா டீகா, லட்சுமி படத்தில் மொரக்கா மாட்ரக்கா போன்ற பாடல்களை பாடியிருக்கிறார். அண்மையில் இவர் தனது அப்பாவுடன் ஒரு அழகிய புகைப்படம் எடுத்துள்ளார்.

அதை உன்னி கிருஷ்ணன் தனது இன்ஸ்டாவில் பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம உத்ராவா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என அசந்து போய் பார்க்கின்றனர்.



Advertisement

Advertisement