நடிகர் ரவி மோகன் கடந்த வாரம் அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவாகரத்து பிரச்சனையில் இருப்பதாகவும், இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது மனைவியும் அவருடைய குடும்பத்தினரும் தன்னை கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், தனக்கென தனி வங்கி கணக்கு கூட வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதேபோல், தனது குழந்தைகளை பார்க்க கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும், ஒரு கட்டத்தில் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ரவி மோகன் அந்த பேட்டியில் உருக்கமாக பகிர்ந்திருந்தார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் நடிகை அம்பிகா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ரவி மோகனுக்கு ஆதரவாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “டியர் ரவி, இந்த கஷ்டமான சூழ்நிலையில் பலவீனமாக இருக்காதீர்கள். எல்லாமே ஒருநாள் சரியாகும். கடவுள் நம்முடன் இருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் அவர் நம்மை சோதிக்கிறார். எந்த நெகட்டிவ் விஷயத்திலும் ஈடுபடாதீர்கள். உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “உங்கள் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்புதான் ஒருநாள் அவர்களை மீண்டும் உங்களிடம் கொண்டு வரும். கடவுளை நம்புங்கள். ஆரோக்கியமாக சாப்பிட்டு தூங்குங்கள். குடும்பத்தினர் அல்லது நம்பிக்கைக்குரிய நண்பர்களுடன் எப்போதும் இருங்கள்” என்றும் அம்பிகா அறிவுரை வழங்கியுள்ளார்.
நடிகை அம்பிகாவின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!