• Jun 11 2026

வாழ்க்கை சுமை தாங்க முடியாமல் ரவி எடுத்த திடீர் முடிவு.? பலரையும் கலங்க வைத்த பயணம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக உள்ளது.

அதில், தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து தொடர்பான பிரச்சனையில் இருப்பதாகவும், அவருடைய வீட்டில் பல கொடுமைகளை அனுபவித்தாகவும்  அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், தனது குடும்ப சூழ்நிலையால் தனக்கு சொந்த வங்கி கணக்கு கூட வைத்துக்கொள்ள முடியவில்லை, குழந்தைகளை பார்க்க முடியவில்லை, எனக்கு ஆறுதலாக இருந்த கெனிஷாவையும் ஊரை விட்டு வெளியேற்றி விட்டார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலைமை காரணமாக மன அழுத்தம் அதிகரித்ததாகவும், ஒரு கட்டத்தில் கடும் மன உளைச்சலை சந்தித்ததாகவும் அவர் பேட்டியில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, தனது தனிப்பட்ட பிரச்சனைகள் தீரும் வரை புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், தற்போது ஒப்பந்தமான சில படங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்றும் அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், நடிகர் ரவி மோகன் தற்போது மேலும் ஒரு முக்கியமான முடிவாக அவர் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றுள்ளார். தற்போது  சபரிமலை நோக்கி விரதம் தொடங்கிய அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரவி மோகனின் இந்த ஆன்மிக முயற்சி, அவரது வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு மன அமைதியும் தீர்வும் கிடைக்க உதவும் என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவரின் இந்த முடிவு தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாக மாறி வருவதோடு பலரும் அவருடைய தோற்றத்தையும், அவருடைய நிலைமையும் பார்த்து கலங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement