• Sep 21 2024

பெற்றோர்கள் இருக்கும்போதே அவர்களை கொண்டாடுங்கள்… சிவகார்த்திகேயனுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் டான். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார் .மேலும் மனோபாலாஜி, எஸ் ஜே சூரியா, சமுத்திரகனி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மே 11ம் திகதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி இதுவரை 100 கோடிக்கு மேல் வசூலை வாரி இறைத்துள்ளது.

பள்ளியில் ஏற்படும் காதல் கல்லூரியிலும் தொடர்தல்,பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள் ஒருநாள் பிடிபடுவது. அம்மாவை இழந்த பிள்ளைகளுக்கு தந்தையே தாயுமானவன் ஆக இருப்பது. பிள்ளைகளுக்காக எதையும் ஏற்கும் அப்பாக்கள், ஆசிரியர்கள் மன்னிப்பில் உருவாகும் மாணவனின் வாழ்க்கை என அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், டான் திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றுக்கொடுத்தது.

அதுமட்டுமன்றி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை அழைத்து பாராட்டி இருந்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த திரைப்படத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன்" "பெற்றோர்கள் இருக்கும்போதே அவர்களை கொண்டாடுங்கள் என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்" என பதிவிட்டுள்ளார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement