• Apr 28 2024

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த நிஷா கணேஷ்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் வில்லியாக நடித்தவர் நிஷா கணேஷ். அது மட்டுமல்லாமல் மேலும் சில சீரியல்களில் நடித்த இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணேஷ் வெங்கட்ராமன் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.


இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து அண்மையில் மீண்டும் கர்ப்பமானார். இந்த நிலையில் இன்று காலை நிஷாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய், சேய் இருவரும் இருப்பதாக நலமாக இருப்பதாக கணேஷ் தெரிவித்து இருக்கிறார்.


இதனால் ரசிகர்கள் மற்றும் பிரலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement