• May 13 2024

உணர்ச்சிவசப்பட்டு நடிகர் பிரபாஸின் கன்னத்தில் அடித்து விளையாடிய பெண்- வைரலாகும் வீடியோ

stella / 7 months ago

Advertisement

Listen News!


தெலுங்கு நடிகரான நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இவர் தற்பொழுது கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றார்.இப்படமும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகின்றது.


சலார் திரைப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது.பிரபாஸ் ரசிகை ஒருவர் பொது இடத்தில் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரும் பொறுமையாக அந்த பெண்ணுடன் செல்பிக்கு போஸ் கொடுக்கிறார்.

உணர்ச்சியில் பொங்கிய அந்த பெண் போகும்போது பிரபாஸ் கன்னத்தில் அடித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement