• May 11 2024

விஜய்க்கும் சன்டிவிக்கும் இடையில் இப்படியொரு பிரச்சினையா?- லியோ ட்ரெய்லர் குறித்து வெளியாகிய தகவல்

stella / 7 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியுள்ள இப்படம் சூப்பர் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் நம்பியிருக்கின்றனர்.மேலும் இப்படம்  ரிலீஸுக்கு முன்னதாகவே 400 கோடி ரூபாய்வரை பிஸ்னெஸ் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அதனையடுத்து அக்டோபர் 5ஆம் தேதி லியோ ட்ரெய்லர் ரிலீஸாகும் என்று கூறப்படுகின்றது.


இந்நிலையில் லியோ ட்ரெய்லர் எதில் ரிலீஸாகும் என்பது தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ட்ரெய்லரானது சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகவிருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் டிவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதற்கிடையே சென்னையின் முக்கிய இடங்களிலும் திரைகள் அமைத்து லியோ ட்ரெய்லர் திரையிடப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது சூப்பர் ஸ்டார் ரஜினியா இல்லை விஜய்யா என்ற பஞ்சாயத்து பீக்கில் இருந்தது. அப்போது மேடையில் கலாநிதி மாறன் பேசியது விஜய்க்கு எதிரானது என்று ஒருதரப்பினர் கிளப்பிவிட்டனர்.


இது தவிர ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் விஜய்யை பற்றி அட்லி உள்ளிட்டோர் புகழ்ந்து பேசினார்கள்.அந்த ஆடியோ வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பானது. ஆனால் ஒளிபரப்பானதில் விஜய் பற்றிய பேச்சுக்கள் எடிட் செய்யப்பட்டிருந்தன. 

எனவே விஜய்க்கு எதிராக சன் குழுமம் களமிறங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. சன் டிவியில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவிருப்பதை அடுத்து விஜய்க்கும் சன் டிவிக்கும் எந்த பஞ்சாயத்தும் இல்லை என்பது உறுதியாகியிருப்பதாக திரைத்துறையினரும், விஜய் ரசிகர்களும் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement