• May 19 2024

கமர்ஷியல் வெற்றி என்பது ஒரு விபத்து- ரசிகர்களுக்கு தனது தொழில் ரகசியம் பற்றி பகிர்ந்த வெற்றிமாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை கௌரவிக்கும் பொருட்டு பல்வேறு விருது வழங்கும் விழா நடைபெறுவதுண்டு. அந்த வகையில் கடந் மே மாதமும் விருது வழங்கும் விழா ஒன்றினை பிரபல சேனல் ஒன்று நடத்தியிருந்தது. இரண்டு நாட்களாக பிரமாண்டமாக இந்த விழா நடைபெற்றது.

இந்த விழாவில் வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான வெற்றிமாறனுக்கு “Director of the Decade” என்ற விருது அளிக்கப்பட்டது. இதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வழங்கினார்.

அப்போது இயக்குநர் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் மிஷ்கின் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பேசிய வீடியோ ஒளிபரப்பானது.

விருது பெற்ற வெற்றிமாறனிடம் “நீங்கள் அடிக்கும் அனைத்து பந்துகளும் சிக்ஸ் ஆகுதே… அது எப்படி சாத்தியமாகிறது?” என்று கேட்கப்பட்ட போது “என்னுடைய குருநாதர் பாலு மகேந்திரா எப்போதுமே சொல்வார். ஒரு படத்தின் கமர்ஷியல் வெற்றி என்பது ஒரு விபத்து. அது நம்ம கையில இல்ல. நம்மளால என்ன பண்ண முடியுமோ அத பெஸ்ட்டா பண்ணனும். அதே நேரத்தில் நான் ரசிகர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நான் எடுத்த படங்கள் வணிக ரீதியான வெற்றிபெறக் கூடிய தன்மையில் இல்லாத படங்கள். அதை கூடுதல் அன்போடு அவர்கள் ரசித்து பார்த்தார்கள். அதனால் அவர்கள்தான் காரணம். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement