• Sep 17 2024

கர்ப்பமாக இருக்கும் 2-ஆவது மனைவி- முதல் மனைவிக்காக காத்திருக்கின்றேன் எனக் கூறிய பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபீர். இவர் மறைந்த முன்னணி பாலிவுட் நடிகரான ரிஷி கபூரின் மகன் ஆவார். நான்காவது தலைமுறை கபூர் வாரிசான நடிகர் ரன்பீர் கபீர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாலிவுட்டில் இருந்து தனக்கென ஒரு சினிமா பாரம்பரியத்தை உருவாக்கி இருக்கின்றார்.

நடிகர் ரன்பீர் கபூர் தனது நடிப்பின் மூலம் பாலிவுட் திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார். இவர் நடித்த படங்கள் வெற்றியை பெற்ற அதே நேரம் ஒரு சில படங்கள் தோல்வியினையும் பெற்று இருக்கின்றன. ஆனாலும் எதற்குமே தயங்காத ரன்பீன் கபூர் வெற்றி தோல்வியை எப்போதும் சமமாகவே மதித்து வருவார்.

மேலும் நடிகர் ரன்பீர் கபூர் பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியான ஆலியா பட் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டுள்ளார். அதாவது பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கும், நடிகை ஆலியா பட்டுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி மும்பையில் வைத்து கோலாகலமான முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் தனது முதல் மனைவியை பார்ப்பதற்கு காத்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து பிரபல பாலிவுட் இயக்குநரும் மற்றும் டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கானிடம் கேட்டதற்கு, அந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியுமே என்று கூறிவிட்டார். இயக்குநர் ஃபரா அப்படி தெரிவித்ததன் அர்த்தம் என்ன எனப் பலரும் இது தொடர்பாகக் கேட்டு வருகிறார்கள்

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகர் ரன்பீர் கபூர் கூறியதை கேட்டவர்கள், அந்த பெண் யாருய்யா, எங்களுக்கே பார்க்கணும் போல இருக்கு என்று கூறியுள்ளார்கள். அதற்கு நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது, "ஒரு பெண் நான் தங்கியிருக்கும் வீட்டின் கேட் அருகே வந்து நின்றிருக்கிறார். ஐயரை அழைத்து வந்து என் கேட்டை முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கேட்டில் குங்குமம், பூக்கள் இருந்ததை பார்த்தேன். இது குறித்து காவலாளியிடம் கேட்டதற்கு, அவர் தான் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தார். என் முதல் மனைவியை நான் இன்னும் பார்க்கவில்லை. அவரை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

இந்நிலையில் கேட்டை மணந்த பெண்ணைத் தான் நடிகர் ரன்பீர் தன் முதல் மனைவி என்று கூறியிருக்கிறார். இது மட்டும் அந்த பெண்ணுக்கு தெரிந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவார் என்கிறார்கள் நடிகர் ரன்பீர் கபூரின் ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement