• May 20 2024

பல் துலக்கிக் கொண்டே மாமனிதன் திரைப்படம் குறித்து பேட்டி கொடுத்த நடிகர் கூல் சுரேஷ், - முகம் சுளித்த ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகராக தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ள முக்கிய நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடுவில கொஞ்சம் பக்கத்தில காணோம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா போன்ற திரைப்படங்கள் இவரை சிறந்த நடிகனாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாகவும் நெக்கட்டிவ் ரோலிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முதல் வெளியாகிய திரைப்படம் தான் மாமனிதன்.

இப்படம் சிறப்பான விமர்சனங்களுடன் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது. படம் தற்போது கமலின் விக்ரம், சுந்தர் சியின் பட்டாம்பூச்சி, அசோக்செல்வனின் வேழம் ஆகிய படங்களுடன் திரையரங்குகளில் மோதி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிலேயே தங்கிய நடிகர் கூல் சுரேஷ், படம்குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். காலை வேலையில் இந்தப் பேட்டி நடத்தப்பட்ட நிலையில், பல் விளக்கிக் கொண்டே இந்த பேட்டியை அவர் அளித்துள்ளார்.

இந்த பேட்டியின்போது விஜய் சேதுபதியை கருப்பு கமல்ஹாசன் என்று அவர் பாராட்டினார். மேலும் அவர் உண்மையிலேயே மாமனிதன் தான் என்றும் பாராட்டித் தள்ளினார். இடையிடையில் பல் துலக்கவும் மறக்கவில்லை. இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்தது. இதனால் இவரது இந்த அட்ராசிட்டியை பார்த்தவர்கள் சைடில் பல கமெண்ட்ஸ்களை கொடுத்தவண்ணம் இருந்தனர். தொடர்ந்து பேசிய அவர் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் கருத்தே என்றும் குருத்து எதுவும் இல்லை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement