• May 20 2024

வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஆண்டவரின் பஞ்சதந்திரம் திரைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த நகைச்சுவை தமிழ் திரைப்படம் பஞ்சதந்திரம். இத்திரைப்படத்தை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கினார்.இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்,ஜெயராம், ரமேஷ், அரவிந்த், ஸ்ரீமான், யுகிசேது நடித்திருந்தனர்.

மேலும்,சிம்ரன், ரம்யா கிருஷ்ணன்,ஊர்வசி ஐஸ்வர்யா மற்றும் நாகேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஆர்தர் ஆ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கான விநியோக உரிமையை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெற்றது.பி.எல் தேனப்பன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படம் கடந்த 2002.ஜூன்.28-ஆம் திகதி வெளியாகியது. அந்தவகையில் திரைப்படம் வெளியாகி 20 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இத்திரைப்பட வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிகரீதியில் வெற்றியை கொடுத்தது

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இந்தப் படத்தின் பாட்-2 வருமா என ஆவலோடு காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்துக்காக இந்த படத்தின் நடிகர்கள் இணைந்து உருவாக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் இப்படத்தின் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement