• Apr 28 2026

இரண்டு நாட்களில் இத்தனை கோடியா? பரத்தின் 'காளிதாஸ் 2' வசூல் நிலவரத்தைப் பாருங்க..

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

'காளிதாஸ் 2' திரைப்படம் பரத் நடிப்பில் ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2018ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற காளிதாஸ் படத்தின் தொடர்ச்சியாக உருவான இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார்.


இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, சங்கீதா மற்றும் அபர்ணதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இந்தப் படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியான பின்னர் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்நிலையில், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, உலகளவில் இரண்டு நாட்களில் இப்படம் சுமார் 1.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முதல் பாகம் அளவிற்கு பெரிய வரவேற்பு இல்லாதபோதிலும், ஆரம்ப வசூல் ஒரு சராசரி நிலையை காட்டுகிறது.

வரும் நாட்களில் வாய்மொழி விமர்சனங்கள் மற்றும் வார இறுதி கூட்டம் ஆகியவற்றைப் பொறுத்து இப்படத்தின் வசூல் மேலும் உயருமா என்பது தெரியவரும். ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்படும் படமாக இது மாறுமா என்பதையும் காத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement