• Jan 15 2025

கம்பேக்னா இப்படிதான் இருக்கணும்... அந்தகன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் அளித்த பயில்வான்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடி ப்பில் வெளியான திரைப்படம் தான் அந்தகன். ஹிந்தியில் மாபெரும்  வெற்றி அடைந்த அந்தாதூன் படத்தில் தமிழ் ரீமேக் தான் இந்த திரைப்படம்.

இந்த நிலையில், அந்தகன் திரைப்படம் வெளியாகி கலவையான  விமர்சனங்களை பெற்று வரும் வகையில் பிரபல திரை விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் இதற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், அந்தகன் படத்தில் நிறைய டுவிஸ்ட் இருக்கு. எந்த இடத்திலும் போர் அடிக்காமல் சுவாரஸ்யமாக இருக்கிறது. கண் தெரியாத பிரசாந்துக்கு நன்றாக பியானோ வாசிக்க தெரியும். அவரை சிலர் கடத்தி வைத்து துன்புறுத்துகின்றார்கள். இந்த துரோகிகளின் சதிகளில் இருந்து எப்படி பிரசாந்த் வெளியே வருகின்றார் என்பதுதான் அந்தகன் படத்தில் கதை. இந்த படம் விறுவிறுப்பு குறையாமல் நன்றாக உள்ளது.


நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்தை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கம்பேக் கம்பேக்னு சொல்லுவாங்க. ஆனால் அது கம்பேக்  திரைப்படமாக இருக்காது நிறைய படங்கள் இப்படியே சொல்லி வீணாப்போனது. ஆனால் பிரசாந்த் நடித்த அந்தகன் படம் உண்மையிலே அவருக்கு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது.  கண்ணை மூடிக்கொண்டு பார்வை இல்லாதவராக நடித்து விடலாம். ஆனால் கண்ணை திறந்து கொண்டே பார்வையற்றவராக நடித்துள்ளார் பிரசாந்த். இது பாராட்டத்தக்க விடயம்.

சமுத்திரக்கனியை இதுவரை வில்லன், குணசித்திர கதாபாத்திரம் ஆகியவற்றில் தான் பார்த்து இருப்போம். ஆனால் இந்த படத்தில் மோசமான ரோலில் நடித்துள்ளார். சிம்ரன் அவருக்கு சின்ன வீடாக வைத்துள்ளார். இந்த விஷயம் யாருக்குத் தெரியும் என்பது தான் படத்தின் கதை ஓட்டம். இதனை வெளியில் சொல்லி விடுவேன் என்று சிம்ரனை மிரட்டி பணம் சம்பாதிக்கின்றார் யோகி பாபு. அதேபோல வனிதாவுக்கு ஏற்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, அனிருத் பாடிய பாடல் சிறப்பாக வந்துள்ளது. பிரசாந்தின்  டான்ஸ் இல்லை என்று வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு இறுதியில் தரமான குத்துப் பாடல் ஒன்று காணப்படுகின்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரசாந்த்  அட்டகாசமான படத்தை கொடுத்துள்ளார் என்று அந்தகன் படத்தை பாராட்டியுள்ளார் பயில்வான்.


Advertisement

Advertisement