• Jan 18 2025

அட்லீயை கேட்ச் பண்ண வரிசையில் காத்திருக்கும் பாலிவுட் ஹீரோஸ்! ரன்வீர் சிங்கே இப்படி சொல்லிட்டாரே.!!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டில் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர்  தான் அட்லீ. இவர் சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீண்ட வருடங்கள் கழித்து தான் அண்மையின் குழந்தையும் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வந்த அட்லீ, ஹாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலில் சாதனை செய்திருந்தது.

இதன் காரணமாகவே பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலரும் அட்லீயுடன் படம் பண்ண வேண்டும் என்று வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.


தற்போது முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின்  திருமணம் ஜீலை மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ப்ரீ வெட்டிங் பங்க்ஷன் கோலாகலமாக நடந்து வருகின்றது.

இதில் உலக அளவில் காணப்படும் பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள், பாலிவுட், ஹாலிவுட் நடிகர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அட்லீயும் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.


இந்த நிலையில், அட்லீயை அடுத்து யார் கேட்ச் பண்ண போறாங்க என்று மும்பை ஹீரோக்கள் எல்லாம் ஸ்லிப்பில் வரிசையாக கைகளை இப்படி ரெடியாக வைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார் என ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் காபூர் உள்ளிட்டோர் பேசிய வீடியோ தற்போது வைரலாக உள்ளது.

ஷாருக்கான் நடித்து வந்த டான் படங்களின் வரிசையில் உருவாக உள்ள டான் 3 திரைப்படத்தில் நடிக்க போகும் ரன்வீர் சிங், அட்லீ  பற்றி இவ்வாறு பேசிய வீடியோ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

Advertisement