• Mar 15 2026

தமிழ் டப்பிங் இல்லாமலே சக்கைபோடு போடும் மஞ்சும்மல் பாய்ஸ்! 10 நாளில் இத்தனை கோடிகளா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' ஒரே நாளில் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்.

சிதம்பரம் என்பவர் இயற்றியுள்ள இந்த படம், கேரளாவில் மஞ்சுமெல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக்கொள்ள, அவரை அவரது நண்பர்கள்  எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.


கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் கேரளாவை போன்று தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தமிழ் டப்பிங் இல்லாமல் படம் திரையிடப்பட்டாலும், பல்வேறு திரையரங்குகளில் ஏராளமான காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. 

இந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியாகி 10வது நாளில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement