• Jan 15 2025

தப்பான கமெண்ட் வரும் தெரிஞ்சே வீடியோ போடுற.. பிக்பாஸ் ஷிவானிக்கு குவியும் கண்டனம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடையில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி அந்த நிகழ்ச்சியில் 98 நாட்கள் வரை விளையாடினார் என்பதும் பாலாஜி முருகதாஸ் உடன் அவர் செய்த ரொமான்ஸ் காட்சிகள் நிகழ்ச்சியை பரபரப்பாக கொண்டு சென்றது என்பது தெரிந்தது.

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள ஷிவானி நாராயணன் நான்கு மில்லியன் ஃபாலோயர்களுக்கும் அதிகமாக உள்ள நிலையில் அவர் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்தும் அவருக்கு இன்னும் சரியான திரைப்பட வாய்ப்புகள் அல்லது சீரியல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் தனது முயற்சி கைவிடாமல் ஒர்க் அவுட் செய்வது போன்ற புகைப்படங்கள் வீடியோக்கள், கிளாமர் உடையில் போட்டோஷூட்  ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்றுமுன் அவர் ’இன்று உடற்பயிற்சி செய்தால் நாளை வலிமையாக மாறலாம்’ என்று கேப்ஷனாக பதிவு செய்து #legday என்ற ஹாஷ்டாக்கையும் பதிவு செய்துள்ளார். கிளாமர் உடையில் அவர் ஒர்க்அவுட் செய்யும் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

குறிப்பாக ’தப்பான கமெண்ட் வரும் என்று தெரிந்தே வீடியோ போடுகிறீர்கள்’ என்பது போன்ற நெகட்டிவ் கமெண்ட்களும்,  ’தலைவியின் உடற்பயிற்சி வீடியோவை பார்க்க மனம் மகிழ்ச்சியில் தித்திக்கும்’ என்றும் ’ஒவ்வொரு நாளும் ஒர்க்அவுட் செய்து உடம்பை ஸ்லிம் ஆக்கி வருகிறீர்கள்’ என்பது போன்ற பாசிட்டிவ் கமெண்ட்களும் பதிவாகி வருகின்றன. இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக் குவிந்துள்ளது.


Advertisement

Advertisement