• May 08 2026

10 வருட கனவு நிஜமாயிற்று..!! பிக் பாஸ் விக்கல்ஸ் விக்ரம் ஹீரோவாக அறிமுகம்! டைட்டில் இதோ..

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் காமெடி கண்டெண்டுகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்  விக்கல்ஸ் விக்ரம் . பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்து கொண்டு இறுதி வரை முன்னேறி மேலும் பிரபலமானார்.

இந்த நிலையில், ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் விக்கல்ஸ் விக்ரம். இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். 

ஹிதா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் மற்றும் ஜி. திம்மா ரெட்டி இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற டைட்டில் வெளியீட்டு விழாவில் அரோரா, கனி, சுபிக்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


குறித்த நிகழ்ச்சியில் பேசிய விக்ரம்,  2016ஆம் ஆண்டு தியேட்டர் ஆர்டிஸ்டாக தொடங்கிய அவர், பின்னர் சமூக வலைத்தள ரீல்ஸ்கள் மூலம் கவனம் பெற்றார். குறிப்பாக “நிலவை கொண்டு வா” பாடல் ரீல்ஸ் வைரலானது தனது வாழ்க்கையை மாற்றியதாக கூறினார். எஸ்.ஜே. சூர்யா மற்றும் சிம்ரன் பாராட்டியதும், இசையமைப்பாளர் தேவா தொடர்பு கொண்டதும் மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் தன்னை குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொண்டதாகவும், தற்போது ஹீரோவாக நடிப்பது தனது கனவு நனவாகியுள்ளதாகவும் விக்ரம் உணர்ச்சியுடன் பகிர்ந்தார்.

லைட் வெயிட் பேபி படத்தின் போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement