• May 20 2024

வெளியானது 'பிக்பாஸ்' சீசன் 6 தொடங்கும் தேதி... அறிவிப்பை வெளியிட்ட முக்கிய நபர்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலகின் மிகவும் அதிகளவான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று 'பிக்பாஸ்'. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியானது இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், விரைவில் இதன் 6-ஆவது சீசன் தொடங்க இருக்கின்றது. 


மேலும் கடந்த 5 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எனினும் எதிர்பாராத விதமாக கடந்த சீசனில் கொரோனா தொற்றால் கமல்ஹாசன் பதிக்கப்பட்டிருந்தபோது ஒருவாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-ஆவது சீசன் முடிந்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கமல் ஹாசன் படப்பிடிப்புக்களில் பிஸியாக இருந்த காரணத்தால் இதனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி இருந்தார்.


இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏனைய சீசன்களைப் போலவே இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளமை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த 6-ஆவது சீசனில் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாதவர்கள் கூட பங்கேற்பதற்கு சிறப்பு நிறைந்த வாய்ப்பு விஜய் டீவி சார்பில் வழங்கப்பட்டது. இதனிடையே ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் பங்குபற்ற உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றது. 


அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது எதிர்வரும் அக்டோபர் 9-ஆம் திகதி தொடங்க இருக்கின்றதாம். இதுகுறித்த தகவலினை ஜமாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement