• May 21 2024

விஷம் குடித்த வெண்பா..பதறியடித்து ஓடிப்போன பாரதி-வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா .இத் தொடரில் சமீபத்தில் தான் தீவிரவாதி சீக்வன்ஸ் முடிவுற்றது.அmந்த சீனும் பீஸ்ட் படத்தை அப்பட்டமாக அப்படியே காபி அடித்து இருந்தார்  பாரதி கண்ணம்மா  இயக்குநர். தற்போது தான் மெயின் கதைக்கே மீண்டும் வந்திருக்கிறார்.

அதாவது வில்லி வெண்பா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் நேராக பாரதியிடம் வந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கெஞ்சுகிறார். அதை கேட்டு கோபமாகும் பாரதி 'யாரோ குழந்தைக்கு நான் அப்பா ஆகணுமா, எதை உதவியாக கேட்கனுமும்னு ஒரு விவஸ்தை இல்லையா' என கேட்டு வெண்பாவை கடுமையாக திட்டிவிடுகிறார்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது வெண்பா விஷம் குடித்துவிடுவது போலவும் அதற்க்கு பிறகு பாரதிக்கு நான் சாகப்போறேன் குட் பாய் என  மெசேஜ் அனுப்புகிறார். 'இதை தவிர வேறு வழி  வெண்பா சொன்னதை கேட்டு பாரதி அவரை காப்பாற்ற ஓடி வருகின்றார்.

'நான் இருக்கும்வரை உன்னை சாக விட மாட்டேன் வெண்பா' என கூறி அவரை தூக்கி செல்கிறார் பாரதி.

வெண்பா விஷம் குடித்தார் என சொன்னால் நம்புற மாதிரியா இருக்கு. இதுவும் டிராமாவாக தான் இருக்குமோ?  என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.




Advertisement

Advertisement