• Sep 20 2024

முடிவுக்கு வந்தது பரத்தின் 50வது படம்: எப்போது ரிலீஸ்..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நல்ல திறமையுள்ள நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். சிலருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்க ஜொலிக்கிறார்கள், நல்ல திறமை இருந்தும் கலைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி நடிக்கக் கூடிய திறமை இருந்தும் சரியான படவாய்ப்புக்கள் இல்லாமல்த் தவித்து வரும் நடிகர் தான் பரத்.

இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானவர் இதனைத் தொடர்ந்து இவர் நடித்த காதல் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதையடுத்து சிறந்த நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளியான சேவல் நேபாளி கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் இவரை முக்கிய நடிகராக அடையாளப்படுத்தியுள்ளது.

மேலும் அதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அவரது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் ஒரு கதை கூட அவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.அடுத்து என்ன படம் நடிக்கிறார், எத்தனை படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பரத் நடித்த ஐம்பதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பரத், வாணிபோஜன் நடிப்பில் ஆர் பி பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லவ். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடும் புகைப்படத்தை வாணிபோஜன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

இந்நிலையில் இந்த படத்தை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement