• Jan 19 2025

சினிமாவில் ஹீரோவான பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகன்! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த நிலையில், அதில் நடிக்கும் நடிகை ஒருவரின் மகன்  சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். 

அதன்படி, பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அம்மாவாக நடிப்பவர் தான்  ராஜ்யலட்சுமி. அவரது மகன் ரோஹித் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்த தகவலை, சின்னத்திரை நடிகை கம்பம் மீனா புகைப்படத்தின் மூலம்  வெளியிட்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவுக்கு குடும்பம் தான் உலகம், ஆனால் பாக்கியாவின் கணவர் அவரை விட்டு ராதிகா என்ற பெண்ணை இன்னொரு திருமணம் செய்தார். எனினும் பாக்கியா உடைத்து வீட்டில் முடங்காமல், நல்ல தொழிலதிபரா வரவேணும் என்ற தன் கனவை நோக்கி நகர ஆரம்பிக்கின்றார். அதற்கு அவரது  பிள்ளைகளும் உறுதுணையாக நிற்கின்றனர்.


இதையடுத்து, தற்போதைய நாட்களில் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவும் பாக்கியாவின் கஷ்டத்தையும், நல்ல மனசையும் புரிந்து அவருக்கு ஆதரவாக பேசுவதோடு, கோபிக்கும் ஈஸ்வரிக்கும் நல்ல பதிலடியை கொடுத்து வருகிறார். இவ்வாறு, பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

 இவ்வாறான நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகன் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் வெளியாகியுள்ளதாக, நடிகை கம்பம் மீனா புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 ‘பல்லேகோட்டிக்கி பண்டகே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரோஹித் ஹீரோவாக நடித்துள்ளார்.  இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை கம்பம் மீனா,

'பல்லகோட்டிக்கி பண்டகே ஒச்சிந்தி... இது தெலுங்கு படம்.. இதுல நம்ம சங்கராபரணம் ராஜலட்சுமி மேம் பையன் ரோஹித் ஹீரோவா அறிமுகம் ஆகியிருக்கிறார்...

படம் வெற்றியடையவும் ரோஹித் ற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்... சீக்கிரமா தமிழுக்கும் வாங்க தம்பி' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement