• May 11 2024

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து வீடியோ சாங் நாளை ரிலீஸ்- உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் கடந்த 13ஆம் திகதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது . இத்திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார் . விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இவர்களுடன் செல்வராகவன் , ஷைன் டாம் சாக்கோ , யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி , VTV கணேஷ் , ஷாஜி சென் , அபர்ணா தாஸ் , சதீஷ் கிருஷ்ணன் , லில்லிபுட் மற்றும் அங்கூர் அஜித் விகல் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளதோடு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றிருந்தது. அத்தோடு இப்படத்திலிருந்து வெளியாகிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றது.

அந்த வகையில் இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து என்னும் பாடல் திரைக்கு வருவதற்கு முன்னரே அரபிக்குத்து பாடல் உலகளவில் வைரலாகியது . இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இப் பாடலை அனிரூத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர் இந்நிலையில் அரபிக்குத்து பாடலின் வீடீயோ சாங் வடிவில் வெளியிடப்போவதாக உத்தியோக நியூஸ் வெளியாகவுள்ளது . அந்தவகையில் அரபிக்குத்து பாடல் நாளை ரிலீஸாகும் என்று கூறப்பட்டுள்ளது .

Advertisement

Advertisement

Advertisement