• May 11 2024

காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படம் இதுவரை செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர் தான் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் தான் காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா மூவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

முக்கோண காதல் கதையை மையப்படுத்தி இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், உலகளவில் வசூல் சாதனையும் செய்து வருகின்றது.

இந்நிலையில் விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் அமைந்துள்ளது. இதற்கு முன்பு 96 படம் உலகம் முழுவதும் ரூ 55 கோடி வசூல் செய்திருந்த நிலையில், காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரூ 56 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement