• May 12 2024

ரசிகர்களைக் கடுப்பேற்றும் விதத்தில் தனது வருங்கால மனைவியின் புகைப்படத்தை பதிவிட்ட அர்ஜுன் ரெட்டி திரைப்பட நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமான பல நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் ராகுல் ராமகிருஷ்ணா.

இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் தனது வருங்கால மனைவி ஹரிதா உடன் முத்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்.

https://twitter.com/eyrahul/status/1523081419211558912

அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் ஆனாலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் அவரை அதிகம் ட்ரோல் செய்தும் வருகின்றனர். அந்த பெண் ஈடுபாடு இல்லாமல் அந்த போட்டோவுக்கும் போஸ் கொடுத்திருப்பது போல தெரிகிறது என நெட்டிசன்கள் இந்த நடிகரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் நேற்று அந்த பெண்ணின் பெயர் பிந்து என தகவல் பரவியது. இதனால் அவரது பெயர் பிந்து அல்ல ஹரிதா என தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement