• Apr 26 2024

" பீஸ்ட் ஒரு மாபெரும் வெற்றி படம் " - முதன் முதலாக உண்மையைக் கூறிய நடிகர் உதயநிதி ஸ்டாலின்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கிருந்ததோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இத்திரைப்படம் கடும் விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், பீஸ்ட் வெற்றியா அல்லது தோல்வியா என்பது குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறியதில் " பீஸ்ட் ஒரு மாபெரும் வெற்றி படம் " என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பீஸ்ட் வெற்றி படம் என்று உறுதியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement