• Oct 05 2024

அட்லி அடுத்த படம் எடுப்பாரா இல்லையா? ரஜினி, கமல் என மாறி மாறி வரும் வதந்திகள்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் இந்த படம் வெளியாகி 10 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் அட்லி அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

அட்லி அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்றும், அதன் பிறகு சல்மான் கான் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. அது மட்டும் இன்றி அட்லி - சல்மான்கான் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் அட்லியின் அடுத்த படம் குறித்த பணி ஒரு சதவீதம் கூட தொடங்கப்படவில்லை என்றும் அட்லி அடுத்து எந்த படத்தை இயக்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. அட்லி அடுத்த படத்தில் சல்மான்கான் நடிக்க போகிறார் என்பது கூட இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அட்லியிடம் சல்மான்கான் கதை மட்டுமே கேட்டிருப்பதாகவும் இன்னும் அவர் அந்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே அட்லியின் அடுத்த படம் குறித்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் அனைத்தும் சமூக வலைதள பயனாளிகளின் யூகங்களே தவிர எந்தவித அதிகாரமும் அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் அட்லி அடுத்த படத்தை இப்போதைக்கு ஆரம்பிப்பாரா? அப்படியே ஆரம்பித்தாலும் அந்த படத்தை எப்போது தொடங்குவார்? எப்போது முடிப்பார்? என்ற கேள்விகளுக்கு எந்தவித பதிலும் இல்லை. மொத்தத்தில் அட்லி அடுத்த படம் 2025ல் வெளியாக வாய்ப்பு இல்லை என்பது தான் தற்போதைய நிலை ஆகும்.

Advertisement

Advertisement