• Dec 06 2024

அப்போ ஷாருக்கான் இப்போ இவரா! பெரிய தலையை மடக்கிய அட்லீ! வெளியானது அட்லீ-6 அப்டேட்...!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் ஆர்யா, நடிகை நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'ராஜா ராணி'. இந்த திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' என மூன்று பிளாக்பஸ்டர் படங்களையும் இயக்கினார். இந்த மூன்று படங்களையும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


அதனை அடுத்து ஒரு படி மேலே போய் 2023-ம் ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியான 'ஜவான்' படத்தை இயக்கினார். இப்படம் ரூ1,200 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர்.


இந்நிலையில் தற்போது அட்லீயின் அடுத்த திரைப்படத்திற்க்கான அப்டேட் செய்து வந்துள்ளது.அட்லீயின் 6-வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளாராம். அதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஒரு வருடமாக செய்து வருகிறார் அட்லீ. 


இதில் இன்னுமொரு முக்கிய ஹீரோ வேண்டும் என்பதற்காக அட்லீ அந்த கதாபாத்திரத்திற்காக கமல்ஹாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் தொடர்பான செய்திகள் இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

Advertisement

Advertisement