• May 11 2024

இணையத்தை கலக்கும் அதர்வாவின் பட்டத்து அரசன் பட ட்ரெய்லர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 'குறுதி ஆட்டம்', 'டிரிக்கர்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.இவர் தற்பொழுது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'பட்டத்து அரசன்'.


 இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதிரடி, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement