• Jul 27 2024

கவினின் ‘ஸ்டார்’ முதல் நாள் வசூல்.. ‘அரண்மனை 4’ வசூலை மிஞ்சியதா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

கவின் நடிப்பில், இளன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் பெரும்பாலான விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’ படம் இந்த ஆண்டின் முதல் வெற்றி படம் என்று கூறப்படும் நிலையில் ‘ஸ்டார்’ திரைப்படம் இரண்டாவது வெற்றி படம் என்று கூறும் அளவுக்கு ஓப்பனிங் வசூல் இருந்ததாக தெரிகிறது. 


கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் நேற்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ’அரண்மனை 4’ படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சவில்லை என்றும் ’அரண்மனை 4’ முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் கூறப்படுகிறது. 

‘ஸ்டார்’ திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருப்பதால் இன்றும் நாளையும் நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஐந்து நாட்களில் ’அரண்மனை 4’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அந்த வசூலை ‘ஸ்டார்’ படம் மிஞ்சுமா என்பது கேள்விக்குறியே என கூறப்படுகிறது. 

ஆனால் அதே நேரத்தில் கவின் நடித்த முந்தைய திரைப்படமான 'டாடா’ படத்தின் வசூலை விட இரண்டு மடங்கு ‘ஸ்டார்’ படம் வசூல் செய்யும் என்றும் தமிழ் திரை உலகில் தன்னை ஒரு ஹீரோவாக கவின் நிலை நிறுத்திக் கொண்டார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Advertisement

Advertisement