• Oct 18 2024

மலையோரமா காதலியுடன் ரொமான்ஸ் பண்ணும் அர்ஜுன் தாஸ்! கொந்தளிக்கும் ரசிகைகள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெருமான் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது வில்லனாகவும் நடிகராகவும் மாஸ் காட்டி வருகின்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தில் லைஃப் டைம் செட்டில்மேன் என அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரலில் பேசியதிலிருந்து ரசிகர்களின் ஃபேவரிட் ஆகிவிட்டார்.

உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 28 98 ஏடி படத்தில் கிருஷ்ணருக்கு தெலுங்கில் குரல் கொடுத்தது அர்ஜுன் தாஸ் தானாம். அதுமட்டுமின்றி இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ரசவாதி திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது.


இவ்வாறு ஹாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியா நடிகரான அர்ஜுன் தாஸ் காதலிக்கின்றார் என்ற தகவல்கள் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது.

இந்த நிலையில் தனது காதலியின் முகத்தை காட்டாமல் மலை பிரதேசம் ஒன்றில் இருவரும் அணைத்தபடி இருக்கும் பேக் போட்டோ ஒன்றை வெளியிட்டு ஹார்ட் போட்டுள்ளார் அர்ஜுன் தாஸ்.

இதைப் பார்த்த ரசிகர்கள் உங்கள் காதலி யார் என்று முகத்தை காட்ட மாட்டீர்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Advertisement