• Feb 05 2025

அம்மாவ Devilல பார்த்து பயந்தியா? ஒரு பதிலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த மஞ்சரி மகன்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது ஆகவே தீபக்கின் குடும்பம் பிக்பாஸ் வீட்டுக்குள் ரகசியமாக நுழைந்து சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தது.

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் எட்டின் 79 வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் எந்த போட்டியாளரின் குடும்பத்தினர் உள்ளே நுழைந்து உள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

d_i_a

அதன்படி வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கண்களை மூடி கைகளை விரித்தபடி நிற்கிறார்கள். இதன் போது உனக்கென்ன வேணும்  சொல்லு.. என்ற பாடலுடன் மஞ்சரியின் குடும்பத்தார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.


அவர்களை கண் திறந்து பார்க்காமலே மஞ்சரி எமோஷனலாகி அழுகிறார். மஞ்சரியின் அம்மாவும் அவரை கட்டியணைத்து அழுகிறார். மேலும் தனது மகனை பார்த்த மஞ்சரி, அம்மாவ டெவில்ல பார்த்து பயந்தியா? என்று கேட்க, இல்லையே.. நீ என் அம்மாவாச்சே என க்யூட்டா பதில் சொல்லுகிறார். இது பார்ப்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

மேலும் தனது அம்மாவுடன் பேசிய மஞ்சரி, வெளில இருக்கிறவங்க பாத்துட்டு இந்த பொண்ணு நெகட்டிவா? பொசிட்டிவா? என பேசுறது எனக்கு ஒரு விஷயம் இல்ல. ஆனா உள்ள எல்லாருக்கும் மஞ்சரி எப்படி இருக்கா என்பது மட்டும் போதுமென சொல்லுகிறார்.


Advertisement

Advertisement