• Feb 05 2025

"என் குருவை இழந்து விட்டேன்"! மறைந்த இயக்குநருக்கு கமலஹாசன் இரங்கல்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவை குறித்து நடிகர் கமலஹாசன் டுவிட்டர் தளத்தில் உருக்கமாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். 


பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் வயது முதுமை மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினைகளால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசனும் இவாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.


காலமலஹாசன் அந்த பதிவில்  "நம் காலத்தின் மனிதாபிமான கதைசொல்லியை இந்தியா இழந்துவிட்டது. நான் ஒரு குருவை இழந்துவிட்டேன். தனது படங்களின் மூலம், உண்மையான இந்தியாவை திரைக்கு கொண்டு வந்து, ஆழ்ந்த சமூக விஷயங்களைக் கையாண்டு சாதாரண மக்களை நேசிக்கச் செய்தவர் ஷியாம் பெனகல், அவரது குடும்பத்தினர். நண்பர்கள் மற்றும் அவரது கலையை போற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார். 


 

Advertisement

Advertisement