சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், ரவி ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டிருக்க, இன்றைக்கு உன்னுடைய வெட்டிங் ஆனிவர்சரி இப்போதும் வேலை செய்ய வேண்டுமா? கிளம்பி போ என சொல்லுகின்றார். ஆனாலும் ஒரு ஆர்டர் இருக்குது முடித்துவிட்டு போகின்றேன் என ரவி சொல்லுகின்றார்.
இதன் போது நீத்து தவறி விழுந்ததில் காலில் பலத்த அடிபடுகின்றது. இதனால் அவரை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் போக ரவி முற்பட, அந்த நேரத்தில் ஸ்ருதி அங்கு வருகின்றார். ரவி நீத்துவை தூக்கி வைத்திருப்பதை பார்த்து கோபத்துடன் சென்று விடுகின்றார். ரவி பின்னாடியே சென்று அழைத்தபோதும் அவர் ஆட்டோவில் சென்று விடுகின்றார்.
அதன்பின்பு மீனா ரெடியாகிக் கொண்டிருக்க, முத்து அவரை பார்த்து பிரமித்து வர்ணிக்கின்றார். விஜயாவை ரோகினி மேக்கப் பண்ணி வெளிகாட்டுகின்றார். இதன்போது அங்கு வந்த ரவி ஸ்ருதியைத் தேட வீட்டில் அவர் இல்லாததை நினைத்து அப்சர்ட் ஆகின்றார்.
இதன் போது என்ன நடந்தது என்று ரபியிடம் முத்து மீனா விசாரிக்க, ரெஸ்டாரண்டில் நடந்ததை சொல்லுகின்றார். இதனால் உன் மீது எந்த தப்பும் இல்லை. இதனை பல குரலால் புரிந்து கொள்ள முடியவில்லையா? என முத்துவும் மீனாவும் ஸ்ருதியை தேட கிளம்புகிறார்கள்.
இறுதியில் ஹோட்டலுக்கு அனைவரும் செல்ல, அங்கு எல்லோரும் ஸ்ருதியை கேட்கின்றார்கள். ஆனால் அவர் டப்பிங் போய் இருப்பதாக ரவி பொய் சொல்லுகின்றார்.
ஸ்ருதியின் அப்பா அம்மா வரவும் ரவி கவனிக்காதது போல் நிற்கின்றார். ஆனால் அதன் பின்பு ஸ்ருதி எங்கே என்று அவர்கள் கேட்க, டப்பிங் போயிருப்பதாக சொல்கின்றார். இதனால் விஜயா இப்படியே வாரவங்க எல்லார்கிட்டயும் இப்படி சொல்லிக் கொண்டு இரு எனத் திட்டுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!