பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், ராதிகா வீட்டை விட்டு கிளம்பிய பின் கோபியும் அவரை பார்க்கச் செல்கின்றார். இதனால் ஈஸ்வரி, நல்லவ போல நடிச்சு கோபியை வர வச்சுட்டா... இதுக்காகத்தான் இப்படி நாடகம் ஆடி இருக்கா.. கோபிக்கு எந்த ஒரு சூதுவாதும் தெரியாது என பேசிக்கொண்டு இருக்கின்றார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த பாக்கியா, ஒரு கட்டத்தில் நானும் கொஞ்ச நாளா பார்த்துட்டு இருக்கிறேன் நீங்கள் செய்வது எல்லாம் சரியே இல்ல.. வயசுக்கு ஏற்ற மாதிரியா பண்ணுரிங்க என ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கின்றார்.
மேலும் என்னிடம் வெறும் பேப்பரில் கையெழுத்து வாங்கி கோர்ட் வரை கொண்டு போய் நிப்பாட்டினார் உங்களுடைய மகன். அப்படி செய்தவருக்கு இது எல்லாம் செய்ய தெரியாதா?
அவர் இப்போ அவருடைய லைப்ப பார்க்க போயிருக்கார். அதுல நீங்க தலையிடாதீங்க.. அவங்க எப்படி வாழனும் என்று அவங்க முடிவு எடுக்கட்டும். உங்க பிள்ளையை உங்க கண்ட்ரோல்ல வச்சி இருக்கனும் என்றால் எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. அவர் உங்க கண்ட்ரோல்ல இருக்கணும் என்பதற்காக தான் இப்படி எல்லாம் பண்ணுறீங்க என்று சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சியில் நிற்கின்றார்
மறுபக்கம் ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி ராதிகாவிடம் எதற்காக இப்படி பண்ணினா? நான் இங்கே வந்து விடுகின்றேன் என்று கெஞ்ச, வேண்டாம் நான் உங்களை உங்களுடைய வீட்டில் தானே விட்டு விட்டு வந்தேன். உங்களுடைய நிம்மதிக்காக தான் இப்படி செய்தேன். இனிமேல் இங்க வர வேண்டாம் என்று சொல்லுகின்றார்.
கோபி எவ்வளவு கெஞ்சியும் ராதிகா தனது முடிவிலிருந்து மாறவில்லை. இறுதியில் இந்த பிரிவு தற்காலிகமா? நிரந்தரமா? என்று கேட்க, அதற்கு பதில் உங்களிடம் தான் உள்ளது என்று சொல்லுகின்றார். மேலும் நான் அடிக்கடி வந்து பார்க்கலாமா என்று கேட்க, நீங்க வரவே வேண்டாம் என்று சொல்லி அனுப்புகின்றார் ராதிகா.
இதனால் கோபி மீண்டும் பாருக்கு சென்று குடிக்கின்றார். அங்கு தனது நண்பரை அழைத்து நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லுகின்றார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.
Listen News!