• Apr 14 2026

AR முருகதாஸ் , சல்மான் கூட்டணி! போஸ்டருடன் ரிலீஸ் டேட்டையும் வெளியிட்ட படக்குழு! படம் பேர் கேட்டா சிரிச்சுருவிங்க!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை இந்திய அளவில் பிரபலமாக்கிய மற்றும் பல சரிவுகளை கண்ட முன்னி நடிகர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் AR முருகதாஸ் ஆவர். இவர் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் செய்யப்போவதாக இருந்த நிலையில் இவரது இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.


இவர் இயக்குனரும் , நடிகருமான எஸ் . ஜே சூர்யாவின் உதவி இயக்குனராக இருந்து பின்பு அஜித் நடித்த தீணா திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். குறித்த படத்தின் வெற்றியை தொடர்ந்தே சூர்யாவுக்கு திருப்பு முனையாக அமைந்த கஜினி , விஜயின் முக்கிய படங்களான கத்தி , துப்பாக்கி , சர்க்கார் போன்ற திரைப்படங்களையும் இயக்கினார்.


இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் பாலிவூட் நடிகரான சல்மான் கானை வைத்து ஒரு திரைப்படம் இயக்க போவதாக தகவல் வந்த நிலையில் குறித்த படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிக்கந்தர் என பெயர் வைக்க பட்ட குறித்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ரமலான் பண்டிகை அன்று வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 


Advertisement

Advertisement