• Jan 19 2025

சூர்யாவின் பர்த்டேக்கு இத்தனை திரைப்படங்கள் ரி ரிலீஸா? லிஸ்ட் ரொம்ப நீளுதே..

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விஜய், ரஜினிகாந்த், சூர்யா மற்றும் கமல் ஆகிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி உள்ளன.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான ஹிட் திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளன.

அதன்படி கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த காக்க காக்க திரைப்படம், கே.பி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு நடித்த அயன் திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் 2010 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.


இதைத் தொடர்ந்து அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படமும், சூர்யாவின் நடிப்புக்கு தீனி போட்ட திரைப்படமான கஜினி திரைப்படமும் வெளியாக உள்ளன.

இவ்வாறு சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அட்டகாசமான திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement