• Jan 19 2025

4000 கோடி செலவில் களைகட்டும் ஆனந்த் அம்பானியின் திருமணம்!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இந்தியாவின் முதல் பணக்காரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி பலராலும் ஆச்சரியப்பட்டு வருகின்றன.

இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதோடு கால்ஷீட் அளவுக்கு காசு கொடுத்து அழைத்துள்ளார்களாம். அதுமட்டுமன்றி அவர்கள் ஆடுவதற்கும் பாடுவதற்கும் தனித்தனி சம்பளம் என்று கூறப்படுகிறது.

இந்திர லோகத்து அழகிகளே தோற்றுப் போகும் அளவிற்கு நயன்தாரா, பிரியங்கா சோப்ரா, கர்த்தரினா, ஜான்விக்கபூர், பூஜா ஹெக்டே , அனன்யா பாண்டே, மகேஷ் பாபுவின் மகள் மற்றும் அட்லியின் மனைவி ஆகியோர் கண்கொள்ளாக் காட்சியாக விதம் விதமான ஆடைகளில் ஜொலி ஜொலித்திருந்தனர்.


இந்த நிலையில், தற்போது முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு சுமார் 4000 கோடி செலவு செய்து இந்த திருமணத்தை நடத்தி வைத்து வருவதாக தற்போது தகவல்கள் உலா வருகின்றன. 

எனினும், இந்த 4000ம் கோடியும் அவரின் பாக்கெட் மணி போல தான் இருக்கும். இதனை பிசினஸில் அவர் புரட்டிக் கொள்வார் என ரசிகர்கள் பேசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement