• Sep 21 2024

தனுஷுக்கு போட்டியாக ரிலீஸாகும் அமலா பாலின் பிரம்மாண்ட படைப்பு! டாப் கொடுப்பாரா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் பாடகர் ஆகவும் திகழ்ந்து வருபவர் தான் தனுஷ். தற்போது தனுஷ் தானே இயக்கி நடித்த படம் தான் ராயன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

ராயன் திரைப்படம் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், ராயன் படம் வெளியாகும் அதே தினத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள 'லெவல் கிராஸ்' என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது.


அதாவது ராயன் திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே திகதியில் அமலாபால் நடிப்பில் உருவான 'லெவல் கிராஸ்' என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ராயன் படத்திற்கு இந்த படம் பெரிய போட்டியாக இல்லை என்றாலும் கேரளாவில் டாப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாக காணப்படும் அமலாபால், கர்ப்பமாவதற்கு முன்பாகவே நடித்த இந்த படம் தற்போது வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement